மாவட்ட செய்திகள்

ராமேஸ்வரம் ரெயில் நின்று செல்லக்கோரி உண்ணாவிரதம்

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லக்கோரி உண்ணாவிரதம் நடந்தது.

தினத்தந்தி

கீரனூர்

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் பாசஞ்சர் ரயில் கீரனூரில் நின்று சென்று வந்தது. இதனால், புதுக்கோட்டை, காரைக்குடி ராமேஸ்வரம் வரை செல்லும் பயணிகள், கல்லூரி மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். கொரோனா காலகட்டத்தில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் சென்ற மாதம் தொடங்கியபோது பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டது. ஆனால், இந்த ரெயில் கீரனூரில் நிற்பதில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவு சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, இந்த ரெயில் கீரனூரில் நின்று செல்லக்கோரி ஏற்கனவே அனைத்துக் கட்சி சார்பில் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்த கட்டமாக நேற்று ரயில் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு டெக்கான் நுகர்வோர் பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன், பள்ளத்துபட்டி ஊராட்சி துணைத்தலைவர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கை அடங்கிய மனு, கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியனிடம் கொடுக்கப்பட்டது. மேலும், மதுரை மண்டல ரயில்வே மேலாளருக்கும் மனு அனுப்பி வைக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்