மாவட்ட செய்திகள்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை.

தினத்தந்தி

விக்கிரவாண்டி,

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் அவர்கள் மூலம் பிற மாவட்டங்களிலும் தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் அனுமதி பெற்று செல்கின்றனரா? என போலீசார், மாவட்ட எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள சோதனைச்சாவடியில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜி, தேவி, சப்-இன்ஸ்பெக்டர் மருது ஆகியோர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி இ-பாஸ் அனுமதி உள்ளதா? என தீவிர சோதனை செய்தனர். அவ்வாறு இ-பாஸ் அனுமதியின்றி வந்த வாகனங்களை, விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து அப்படியே திருப்பி அனுப்பினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்