மாவட்ட செய்திகள்

‘பேஸ்புக்’ மூலம் பழகி காதல்: மாணவியை கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்

பேஸ்புக் மூலம் பழகி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 22). இவர் பேஸ்புக் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியுடன் பழகி இருக்கிறார். பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியது. வாலிபர் சந்தோஷ், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டினார். பின்னர் மாணவியை ஆந்திராவுக்கு கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்ததாக தெரிகிறது. அடுத்து அந்த மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரத்திலும் சந்தோஷ் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில் மாணவி காணாமல் போய்விட்டதாக, அவரது பெற்றோர் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை ஆந்திராவில் இருந்து மீட்டு வந்தனர். திருமண ஆசை காட்டி, மாணவியை கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் சந்தோஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது போக்சோ சட்டப்பிரிவில் கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபர் சந்தோஷ் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை