மாவட்ட செய்திகள்

லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் மனு

லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி மதுரை மாநகராட்சி மேயரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தினத்தந்தி

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையம் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் சயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கலந்துகொண்டார். அவரை, கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், பாரதீய கிசான் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டத்தை கைவிடவேண்டும். அதற்கு பதிலாக வைகை அணையில் இருந்து மதுரை குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி இருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்