குளச்சல்,
ரீத்தாபுரம் பேரூராட்சி கரையாகுளம், பத்தறை ஏலா ஷட்டர்களை சரி செய்ய வேண்டும். புறக்கால்வாயை சீரமைக்க வேண்டும். விவசாய பயிர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகா சபா சார்பில் குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் மகா சபா மாவட்ட தலைவர் அர்ஜுனன், பத்தறை ஏலா சங்க தலைவர் ஜாண் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். செயலாளர் மரிய ஜார்ஜ், பொருளாளர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்.