வந்தவாசி அருகே ஏ.டி.எம்.எந்திரத்தில் நிரப்ப எடுத்துச் சென்ற ரூ.9 லட்சம் பறிமுதல் பறக்கும்படையினர் நடவடிக்கை
ஏ.டி.எம்.எந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்துச் சென்ற ரூ.9 லட்சத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் அதனை பறிமுதல் செய்தனர்.
தினத்தந்தி
வந்தவாசி,
வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அலுவலர் துளசிராமன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு தலைமையில் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெள்ளார் அருகே கொடியாலம் கூட்டுரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.