மாவட்ட செய்திகள்

இன்று முதல் திறப்பு; மாநில எல்லைகளில் மதுக்கடைகளை போலீசார் ஆய்வு

புதுவை மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதையொட்டி மதுக்கடைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

பாகூர்,

புதுவை மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதையொட்டி பாகூர் முள்ளோடை பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். மதுக்கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மதுக்கடையில் ஒலிபெருக்கி மூலம் மதுபிரியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கட்டாயம் முகக்கவசம் அணிதல், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு மதுபாட்டில்கள் வாங்குதல் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மதுக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். இதேபோல் பாகூர், சோரியாங்குப்பம், கரையாம்புத்தூர், தவளக்குப்பம் பகுதிகளிலும் மதுக்கடைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்