மாவட்ட செய்திகள்

சாலை விரிவாக்க பணிக்காக வீடுகளை இழந்த மீனவர்கள் மாற்று இடம் கேட்டு உண்ணாவிரத போராட்டம்

எண்ணூர் விரைவு சாலை விரிவாக்க பணிக்காக வீடுகளை இழந்த மீனவர்கள் மாற்று இடம் கேட்டு பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் டோல்கேட் அருகே எண்ணூர் விரைவு சாலை விரிவாக்கப் பணிக்காக கடற்கரையை ஒட்டிய மீனவ கிராமமான நல்லதண்ணீர் ஓடைகுப்பத்தில் உள்ள 446 வீடுகள் கடந்த 2017-ம் ஆண்டு அகற்றப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் எல்லையம்மன் கோவில் அருகே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பார்க்கிங், லிப்ட் உள்ளிட்ட வசதிகளுடன் 10 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

கடற்கரையை ஒட்டி இருப்பதால் அடுக்குமாடி கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லை என கூறி 83 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளை வாங்க மறுத்து வருகின்றனர். இந்தநிலையில் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி காசிமேடு சூரிய நாராயண சாலையில் வக்கீல் செல்வராஜ் குமார் தலைமையில் தங்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு ஆணைகளை கையில் ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை