மாவட்ட செய்திகள்

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுகிறது ஐகோர்ட்டு கருத்து

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை உள்பட நாடு முழுவதும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவு பொருட்கள் பல மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்லவும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்தநிலையில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து தியேட்டருக்குள் உணவு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள் சாந்தனு கேம்பர், மாக்ரந்த் கர்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தியேட்டரில் அநியாய விலைக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்வதுடன், அதை வாங்க வேண்டும் என பார்வையாளர்களை கட்டாயப்படுத்த முடியாது. பார்வையாளர்களுக்கு உணவுப்பொருட்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கவில்லையென்றால் தியேட்டருக்குள் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்யவும் கூடாது. தியேட்டருக்குள் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், பார்வையாளர்களையும் அதை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் 6 வாரத்திற்குள் கொள்கை முடிவை உருவாக்குவதாக மாநில அரசின் வக்கீல் கூறினார். எனவே நீதிபதிகள் மனு மீதான விசாரணையை ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்