மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தினத்தந்தி

ஊத்துக்கோட்டை,

அதில் ஒரு அங்கமாக ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை பாத்திமா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமனோகரன், சிட்டிபாபு, சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 3 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பெற்றோர்கள் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியர் சுதாகர், வக்கீல்கள் வேல்முருகன், தில்லைகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு