மாவட்ட செய்திகள்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலில் திருவெம்பாவை சொற் பொழிவு நடந்தது.

பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அம்மன் சன்னதியில் உள்ள நவக்கிரக சன்னதியில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலையாகவே காட்சி அளித்தது.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை