மாவட்ட செய்திகள்

பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு

திருவாரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பொது வினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 2, 500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாரானது.

இந்த அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,500 டன் அரிசியை பொது வினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.

அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். 42 பெட்டிகளில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து 2, 500 டன் அரிசியுடன் சரக்கு ரெயில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்