மாவட்ட செய்திகள்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டையில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவருமான வைரமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளவர்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிற மாவட்டங்களை விட நமது மாவட்டத்தில் கூடுதல் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். என்றார்.

கூட்டத்தில் கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் புதுக்கோட்டை குமார், அறந்தாங்கி வடக்கு வேலாயுதன், அறந்தாங்கி தெற்கு பெரியசாமி, திருவரங்குளம் மேற்கு துரை.தனசேகரன், திருவரங்குளம் கிழக்கு ராஜேந்திரன், கந்தர்வகோட்டை ரெங்கராஜன், பொன்னமராவதி பழனியான்டி, அன்னவாசல் சாம்பசிவம், குன்னண்டார்கோவில் பால்ராஜ், திருமயம் ராமு, கறம்பக்குடி சரவணன், ஆவுடையார்கோவில் கூத்தையா, விராலிமலை கிழக்கு சுப்பையா, விராலிமலை மேற்கு திருமூர்த்தி, அரிமளம் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கடையக்குடி திலகர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் காந்திராஜ் நன்றி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு