மாவட்ட செய்திகள்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.

புதுச்சேரி,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், புதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அதனை தொடர்ந்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மத்தியில் காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. புதுச்சேரி மக்கள் ஆதரவுடன் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்