மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1½ டன் பீடி இலை பறிமுதல் - 9 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1½ டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மினிலாரியை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அந்த மினிலாரியை தாளமுத்துநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்திரசேகர் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். தொடர்ந்து போலீசார் மினிலாரியில் சோதனை நடத்தினர்.

அப்போது அதில் வெள்ளை சாக்கில் பீடி இலைகள் மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன. இதில் சுமார் 15 மூட்டைகளில் தலா 100 கிலோ வீதம் 1 டன் பீடி இலைகள் இருந்தன.

இந்த பீடி இலைகளை சட்டவிரோதமாக தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போலீசார் மினிலாரி டிரைவர் சந்திரசேகர், கிளீனர் சிலுவைப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (52) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பீடி இலை கடத்தலில் தொடர்பு இருப்பதாக கீழவைப்பாரை சேர்ந்த இருதயவாஸ் (38), ரீகன் (38), பாஸ்கர் (29), இன்பென்ட் (29), அழகாபுரியை சேர்ந்த ராசுகுட்டி (46), தாளமுத்துநகரை சேர்ந்த கார்த்திக் (26), லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த விஜி (42) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 டன் பீடி இலைகள் மற்றும் மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்