மாவட்ட செய்திகள்

போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் விரக்தி: வாலிபர் தற்கொலை முயற்சி

வீராம்பட்டினத்தில் தந்தை- மகன் தகராறில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் எலிமருந்து (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவை வீராம்பட்டினம் தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் பெரியாண்டி (வயது 67). வருமான வரித்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் சுந்தரமூர்த்தி (35) தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் தந்தை, மகனுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் அவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியாண்டி தனது மகன் சுந்தரமூர்த்தி மீது அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சுந்தரமூர்த்தியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) தின்று சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்