மாவட்ட செய்திகள்

வடமாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த கும்பல் கைது

வடமாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில் தமிழக அரசின் நெல் கொள்முதல் கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த வடமாநிலத்தை சேர்ந்த ராம்பாலாக்மைண்ட் (வயது 30) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ஞாயிறு கிராமத்தை சேர்ந்த முகேஷ் (25), சூர்யா (22), சாரதி (23), கருப்பு (21), விக்கி (24) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய அன்பரசை தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு