மாவட்ட செய்திகள்

தானேயில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

தானே கோட்பந்தர் சாலையில் செனா கிரீக் பகுதியில் நேற்று மதியம் கியாஸ் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

தானே,

திடீரென அந்த டேங்கர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அந்த கியாஸ் டேங்கர் லாரியில் தீப்பிடிக்கவில்லை.

இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். இருப்பினும் இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் அந்த கியாஸ் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை