மாவட்ட செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறக்கோரி திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற கோரி திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

திருவாரூர்,

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு டெல்டா மாவட்டங்கள் வறண்ட பாலைவனமாகும். எனவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற தேவையில்லை என்றும், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறக்கோரி திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணைச்செயலாளர் பிரகாஷ் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு