மாவட்ட செய்திகள்

கம்பத்தில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

கம்பத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து சென்றார்.

கம்பம்:

கம்பம் உத்தமபுரம், எல்.எப். மெயின் ரோடு தெருவை சேர்ந்த ஆண்டித்தேவர் மனைவி ராஜம்மாள் (வயது 70). இவர் நேற்று காலை ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.

கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே அவர் வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென்று ராஜம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ராஜம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை