மாவட்ட செய்திகள்

சேலம் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் நல்லக்கண்ணு பேட்டி

சேலம் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று நல்லக்கண்ணு கூறினார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

சேலம் 8 வழிச்சாலை சரியல்ல. அதற்கான எந்தவித அதிகாரமும் இன்றி விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அந்த நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என்று ஒரு அமைச்சரும், பரிசீலனை செய்யப்படும் என்று மற்றொரு அமைச்சரும் கூறியிருக்கின்றனர். ஆனால் இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி கொடுப்பதோடு, உரிய இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

நல்ல தீர்ப்பு

மது விற்பனை மூலம் ரூ.31 ஆயிரத்து 742 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மது காரணமாக பாலியல், வன்முறை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளன என நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்டதால் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தேர்தலுக்கு முன்பே இந்த 3 வழக்குகளிலும், அதற்கு முன்பு பல வழக்குகளிலும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு