மாவட்ட செய்திகள்

நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் அரசு நர்சை தாக்கி நகை பறிப்பு

நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் அரசு நர்சை தாக்கி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

தினத்தந்தி

சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 55). இவர் தமிழக பொது சுகாதாரத் துறையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் சுகாதார நிலையத்தில் பகுதிநேர சுகாதார செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் நெமிலிச்சேரியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் பணிபுரிவதற்காக நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாள பாதை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவர் தனியாக வருவதை நோட்டமிட்டு அவரிடம் ஒரு நபர் நைசாக பேச்சு கொடுத்து வந்த நிலையில், திடீரென சாந்தியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். சம்பவம் குறித்து சாந்தி திருவள்ளூர் இருப்புப்பாதை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து நர்சிடம் சங்கிலி பறித்த திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்து நர்சு சாந்தியிடம் ஒப்படைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்