மாவட்ட செய்திகள்

அரசு அதிகாரிகள் ஆயுள் முழுவதும் நேர்மையாக இருக்க வேண்டும்

அரசு அதிகாரிகள் ஆயுள் முழுவதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று ஈரோட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறினார்.

தினத்தந்தி

ஈரோடு,

சென்னையை தலைமையிடமாக கொண்டு சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமியின் ஈரோடு கிளை ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ளது. இங்கு படித்த மாணவர்கள் 72 பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று தற்போது பல்வேறு அரசு துறையில் அதிகாரிகளாக பொறுப்பேற்க உள்ளனர்.

இவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா, 2018-19-ம் ஆண்டுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஈரோட்டில் நடந்தது.

விழாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

புதிய அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள உங்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது லஞ்சத்தை ஒழிப்பது. லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் மன திடம் வேண்டும். நேர்மையாக பணிபுரிகையில் வரும் எண்ணற்ற தடைகளை தொடர்ந்து எதிர்கொள்ளும் மன உறுதி வேண்டும்.

ஒரு சிலர் அரசு பதவிக்கு வந்தவுடன் நேர்மையாக இருப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு பின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள முடியாமல் லஞ்சத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். நேர்மையாக இருப்பதென்பது ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே பின்பற்றக்கூடிய பொறுப்பு அல்ல. அது ஒருவரின் ஆயுள் முழுவதும் பின்பற்றக்கூடிய பொறுப்பு ஆகும். புதிய அதிகாரிகளாகிய நீங்கள் நேர்மையாக பணிபுரிந்து தமிழகத்தையும், தமிழையும் ஒளிரச்செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் ஆயுள் முழுவதும் நேர்மையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து புதிதாக அரசு அதிகாரிகளாக பொறுப்பேற்க உள்ள 100-க்கும் மேற்பட்டவர்கள் சகாயம் முன்னிலையில் லஞ்சம் வாங்காமல் மக்களுக்கான நேர்மையான அதிகாரிகளாக பணிபுரிவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழாவில் சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியின் பயிற்றுனர்கள் சேகர் மற்றும் பழனிச்சாமி மற்றும் நேர்முகத்தேர்வு வல்லுனர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்படுகளை சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் மோகன் செய்திருந்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்