மாவட்ட செய்திகள்

விவசாயிக்கு கொலைமிரட்டல்: பட்டதாரி வாலிபர் கைது

கயத்தாறு அருகே விவசாயிக்கு கொலைமிரட்டல் விடுத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கயத்தாறு:

கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ராஜம்மாள் (வயது40). இவர், அதே ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மனைவி வேணியிடம் குடும்பச் செலவுக்காக அடகு வைக்க ஒரு பவுன் தங்க சங்கிலி வாங்கியுள்ளார். இதை வேணி திருப்பி கேட்டதற்கு ராஜம்மாள் தரமறுத்துள்ளார். இதை தொடர்ந்து அவர் மீது வேணி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் செய்ததை உடனடியாக வாபஸ் வாங்க கோரி வேணியின் அக்காள் கணவரான விவசாயி மணிகண்டனுக்கு ராஜம்மாளின் மகன் உதயபிரகாஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து உதயபிகாஷை கைது செய்தனர். இவர் பி.காம் பட்டதாரி ஆவார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு