மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கிய மூதாட்டி

பழனியில் மூதாட்டி ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரத்தை வழங்கினார்.

தினத்தந்தி

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தை சேர்ந்த பாலசந்தர் மனைவி சுந்தரி (வயது 78).

இவர் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க விரும்பினார்.

இதுகுறித்து பழனி தாலுகா அலுவலகத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு பழனி தாசில்தார் வடிவேல் முருகன் நேற்று நேரில் சென்றார்.

அங்கு சுந்தரியிடம் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையை தாசில்தார் பெற்றுக்கொண்டார்.

பின்னர் மூதாட்டியை அவர் பாராட்டினார்.

இதுகுறித்து சுந்தரியிடம் கேட்டபோது, எனது கணவர் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தார்.

அவர் இறந்த பிறகு என்னுடைய மகள் வீட்டில் வசித்து வருகிறேன்.

கணவருடைய ஓய்வூதியத்தை பெற்று வருகிறேன். அதன் மூலம் நான் வங்கியில் சேமித்து வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன் என்றார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?