மாவட்ட செய்திகள்

ஹஜ் பயணிகள் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் பாஸ்போர்ட் அதிகாரி வேண்டுகோள்

ஹஜ் பயணிகள் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று பாஸ்போர்ட் அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

திருச்சி,

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகள்தங்களது பாஸ்போர்ட்டுகள் மற்றும் இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் செல்லாது. கணினி முறையில் பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் ஆயுள் காலம் 11-1-2022 வரை இருக்க வேண்டும்.

எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே விண்ணப்பம் செய்து இதுவரை பாஸ்போர்ட் கிடைக்க பெறாதவர்கள் (போலீஸ் விசாரணை முடிந்துவிட்ட நிலையில்) திருச்சி மரக்கடையிலுள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தின் தற்போதையநிலை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

உதவி மையம்

மேலும் ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனியாக ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தில் பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களை நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையம் வருகிற 10-ந்தேதி வரை இயங்கும்.

மேலும் விவரங்களுக்கு 0431-2707203, 2707404 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். rpo.tri-c-hy@mea.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் www.pass-p-o-rt-i-n-d-ia.gov.in என்ற இணையதளம் 1800 258 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி