மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் 
மாவட்ட செய்திகள்

நாளை நடக்கிறது; ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்; மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தகவல்

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஸ்மார்ட் சிட்டி

மதுரை மாநகரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. பெரியார் பஸ் நிலையம் சீரமைப்பு பணி, மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணி, வைகை ஆற்றுக்கரையில் பூங்கா, அடுக்குமாடி வாகன காப்பகம் உள்பட 13 பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக மதுரை மாவட்ட கலெக்டரும், இணை தலைவராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் உள்ளனர்.

இந்த கூட்டத்தை அடிக்கடி கூட்டி, ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக இந்த கூட்டம் தொடர்ந்து கூட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று இணை தலைவராக உள்ள வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் இந்த கூட்டத்தை இன்று(18-ந் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் நடத்துவதற்கும் அறிவிப்பு வெளியிட்டார்.

நாளை நடக்கிறது

இந்த நிலையில் இந்த கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை) காலை நடக்கும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் நிலை, அதன் தரம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்திற்கு பின் ஸ்மாட்ர் சிட்டி பணிகள் மேலும் விரைவுப்படுத்தப்படும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்