பீட்ரூட் ஜூஸ் தொடர்ந்து பருகி வருவது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்தன்மை கொண்டது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் வராமல் பாதுகாக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ரத்த அணுக்களின் எண்ணிக்கையை சீராக பராமரிப்பதிலும் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ரத்த சோகை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் பருகி வந்தால் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் களும் பீட்ரூட் ஜூஸ் பருகி வரலாம். அது கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களுக்கு புத்துயிர் கொடுக்க உதவும். கல்லீரல் பிரச்சினையால் பித்தம் அதிகமாகி பித்த வாந்தி எடுப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் பருகிவந்தால் வாந்தி கட்டுப்படும். புற்றுநோய் வராமல் காப்பதிலும் பீட்ரூட்டின் பங்களிப்பு அதிகம். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் அளவிற்கு புற்றுநோய் எதிர்ப்பு பொருள் பீட்ரூட்டில் உள்ளடங்கி இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு டம்பளர் பீட்ரூட் ஜூஸ் பருகிவந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப் படும். உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் பீட்ரூட் ஜூஸை பருகி வரலாம். அல்சர் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட் ஜூஸுடன் தேன் கலந்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.