பர்கூர்:
பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் காது மற்றும் மூக்கு அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இதனை நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன் தலைமை தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு செவித்திறன் கருவி இலவசமாக வழங்கப்பட்டது. பர்கூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் எழிலரசி முன்னிலை வகித்தார். இதில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு டாக்டர்கள் கே.செந்தில் குமார், ஆர்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.