மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் மனித பாதுகாப்பு கழக மதநல்லிணக்க மாநாடு

நாகர்கோவிலில் மனித பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மத நல்லிணக்க மாநாடு நடந்தது.

தினத்தந்தி

நாகர்கோவில்,

மனித பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மனித உரிமை தின மதநல்லிணக்க மாநில மாநாடு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் முருகன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் வக்கீல் உஷா ஜெய்மோகன் முன்னிலை வகித்தார். மாநாட்டை கடிகை ஆன்றனி தொகுத்து வழங்கினார்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் யாபேஷ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திருவாவடுதுறை ஆதீன பேராசிரியர் ஜெயச்சந்திரன், தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், அரசு தலைமை ஹாஜி அல்ஹாஜ் அபுசாலிஹ் ஆகியோர் கலந்து கொண்டு மதநல்லிணக்கம் குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கழக நிறுவன தலைவர் ஜெயமோகன் எழுச்சியுரையாற்றினார். இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவியாக 10 பேருக்கு தையல் எந்திரம், 2 பேருக்கு மூன்று சக்கர மிதி வண்டிகள், ஒரு நபருக்கு காது கேட்கும் கருவியும் வழங்கினார்.

மாநாட்டில் மாத்தூர் தொட்டி பாலத்திற்கு காமராஜர் பெயர் வைப்பது, மனித உரிமையை பாதுகாக்கவும், மனித உரிமை மீறல்களை தண்டிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்களை மகளிரணி துணை செயலாளர் சகாய அகிலா என்பவரால் வாசித்து நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பாளர் ஜெயராஜ், செயலாளர் ஜாண் பிரைட், இணை செயலாளர் ராமசாமி பிள்ளை ஆகியோர் நடத்தினர்.

விழாவிற்கு மாநில ஆலோசகர் சகாய அருள்ராஜ், தென் மண்டல மகளிரணி செயலாளர் ஜெயாஸ்ரீதரன், மாவட்ட மகளிரணி செயலாளர் ரீட்டா சிவகுமார், நகர தலைவர் ஜேசுதாஸ், துணை செயலாளர் லாசர் மணி, இளைஞரணி செயலாளர் மணிகண்டன், பொறுப்பாளர் மகாதேவன், சத்திய ஜெபசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மகளிரணி துணை செயலாளர் ஜெயபாரதி நன்றி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு