மாவட்ட செய்திகள்

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தினத்தந்தி

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அன்னபூரணி (36). சிவகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து உள்ளார். மேலும் அவரது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சிவக்குமார் மனைவியை தகாத வார்த்தையால் பேசி, அடித்து உதைத்து உள்ளார். பின்னர் முட்செடியால் அவரது கண்ணில் குத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அன்னபூரணி மப்பேடு போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்