மாவட்ட செய்திகள்

திருச்சி மேற்கு தொகுதியில் அடிப்படை பிரச்சினைகளை விரைவில் தீர்க்க பாடுபடுவேன்; தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு உறுதி

திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு 44, 47, 48 வது வார்டுகளிலும் புத்தூர் அக்ர ஹாரம், ஒத்தக்கடை, குதுப்பா பள்ளம், பறவைகள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

புத்தூர் அக்ரஹாரத்தில் கே.என்.நேரு பேசுகையில்,

நீங்கள் வணங்கும் பெருமாள்தான் எனக்கும் குலதெய்வம். உங்களைப் போல் நானும் குறைந்த எண்ணிக்கை உள்ள பிரிவைச் சார்ந்து இருப்பதால் உங்களின் பிரச்சினை கள் அனைத்தும் தெரியும். என்னை வெற்றி பெற வைத்தால் உங்களின் மேம்பாட் டிற்கு பாடுபடுவேன்.

30 ஆயிரம் பிராமணர்கள் இருக்கும் சென்னை ஆலந்தூரில் தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதியின் சிறந்த அணுகுமுறை தான் காரணம். அதே போன்ற அணுகுமுறையை நானும் பின்பற்றுவேன். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதி யிலும் உள்ள சாலை, பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை

பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கு முயற்சி செய்வேன் என்றார். உடன் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை