மாவட்ட செய்திகள்

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் பா.ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் பா.ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பா.ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதே நேரத்தில் மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளி தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து துமகூருவில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மந்திரி பதவியில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி நீக்கப்பட்டது கட்சி மேலிடம் எடுத்த முடிவாகும். அவருக்கு காங்கிரஸ் கட்சியில் புதிய பதவி வழங்கப்படும். அதுகுறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது. ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. கடந்த 9 மாதங்களாக கூட்டணி ஆட்சி கவிழும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். கூட்டணி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. 5 ஆண்டுகளையும் கூட்டணி அரசு முழுமையாக நிறைவு செய்யும். பா.ஜனதாவினர் எவ்வளவு முயன்றாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு கூட்டணி அரசு கவிழும் என்றும், பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். அது சாத்தியமில்லை. தங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து கொள்ள முடியாமல், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் தொடர்பில் இருந்து வருகின்றனர். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பில் இருந்து வருகின்றனர். அதுபற்றி பா.ஜனதா தலைவர்களுக்கு தெரியவில்லை.

நான் 8 ஆண்டுகள் மாநில தலைவராக இருந்துள்ளேன். எனக்கு அரசியல் பற்றி நன்கு தெரியும். எப்போது என்ன செய்ய வேண்டும், எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட அரசியல் தந்திரங்கள் அனைத்தும் அறிந்து வைத்துள்ளேன். அதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் பா.ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைப்பதை தவிர்த்துவிட்டு சிறந்த எதிர்க்கட்சியாக பா.ஜனதா இருப்பதே நல்லது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி