மாவட்ட செய்திகள்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் வாழை தோட்டத்தில் மழை நீர் தேங்கியது வாழைத்தார்கள் அறுவடை செய்வதில் பாதிப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் வாழை தோட்டத்தில் மழை தண்ணீர் தேங்கியது. இதனால் வாழைத்தார்கள் அறுவடை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், விளை நிலங்களிலும் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் தைக்கால், எண்கண், காப்பணாமங்கலம், பூங்காவூர் உள்ளிட்ட இடங்களில் வாழை, கரும்பு உள்ளிட்ட தோட்டப்பயிர்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிவாரணம்

இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள வாழை தோட்டங்களில் மழை தண்ணீர் தேங்கியது. இதனால் பொங்கலை முன்னிட்டு வாழைத்தார்கள் அறுவடை செய்யப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் மழையால் சேதமடைந்த தோட்டப்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை