மாவட்ட செய்திகள்

குமாரச்சேரி ஊராட்சியில் குளம் தூர் வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

குமாரச்சேரி ஊராட்சியில் மும்மாரி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் குமாரச்சேரி காலனி குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் குமாரச்சேரி ஊராட்சியில் மும்மாரி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம் செலவில் குமாரச்சேரி காலனி குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், வளர்ச்சிப்பணி அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கென்னடி பூபாலராயன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் ஆறுமுகம், காந்திமதிநாதன், வரதராஜன், குமாரச்சேரி ஊராட்சி செயலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு குளம் ஆழப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திரளான அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்