மாவட்ட செய்திகள்

ஆற்காட்டில் லாரி மோதி முதியவர் பலி

ஆற்காட்டில் லாரி மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அப்பாய் தெருவைச் சேர்ந்தவர் காலா பாய் (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு ஆற்காடு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே விபத்து நடந்ததும் லாரி நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியையும் அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்