மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் இன்று தொடக்கம்

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

தினத்தந்தி

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறனுடையோருக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மருத்துவ முகாம் அரியலூர் ஒன்றியத்திற்கு இன்று அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருமானூர் ஒன்றியத்திற்கு நாளை (புதன்கிழமை) திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு வருகிற 13-ந் தேதி ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், தா.பழுர் ஒன்றியத்திற்கு 20-ந் தேதி தா.பழுர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், செந்துறை ஒன்றியத்திற்கு 22-ந் தேதி செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப் படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை சிறப்பு மருத்துவர்கள் (எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், (குறிப்பாக அரசு நலத்திட்டங்கள் குறித்த) மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்கவுள்ளனர்.

பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மட்டும் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஊனம் தெரியும்படியான பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு