மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு

அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 35 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் நேற்று முன்தினம் அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த வைப்பம் கிராமத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர்.

தினத்தந்தி

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 35 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் நேற்று முன்தினம் அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த வைப்பம் கிராமத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். ஜெயங்கொண்டம் பிரிவு சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட மொத்தம் 36 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சியாமளா (வயது 50) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று சின்னபிள்ளை என்பவரின் மனைவி இளஞ்சியம்(60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்