மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,275 பேர் பாதிப்பு 46 பேர் சாவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,275 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 46 பேர் உயிரிழந்தனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,275 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 228-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 3,643 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,348-ஆக உயர்ந்தது. 15,237 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 811 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 751 -ஆக உயர்ந்துள்ளது. 6,657 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை