மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,299 பேர் பாதிப்பு 37 பேர் சாவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,299 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 37 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,299 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 898-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 1,427 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300-ஆக உயர்ந்தது. இவர்களில் 15,171 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 761 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 743- ஆக உயர்ந்துள்ளது. 6,605 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு