மாவட்ட செய்திகள்

கடலூரில் கடல் சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு

கடலூரில் கடல் சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

தினத்தந்தி

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 டன் அளவுக்கு மீன் வரத்து இருக்கும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மிக குறைந்த அளவு விசைப்படகு மீனவர்கள் மட்டுமே ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் வானிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப் போது இதமான சாரல் மழையும் பெய்தது.

கடல் சீற்றம் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் ஒருசில மீனவர்களை தவிர்த்து, பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. இதனால் துறைமுகத்துக்கு மீன்களின் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதலே, மீன்பிடி தொழில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூரில் மழை ஓய்ந்து இருந்ததால், மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக கடல் சீற்றத்துடன் இருந்து வருகிறது.

இதனால் தொடர்ந்து 6 நாட்களாக துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வருவதால் நாங்கள் அனைவரும் கவலையடைந்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு