மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில், மாநில நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 11 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

1. நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கா.மகேந்திரன், 2. ம.மு.கோவிலூர் சி.எஸ்.எம்.ஏ. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் எம்.ஏ.சையது அபுதாகீர், 3. பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் த.ஓவியசுந்தரம், 4. பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கி.குருமூர்த்தி, 5. முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் ரா.இளங்கோ, 6. புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியை கே.கீதா.

7. நிலக்கோட்டை சவுராஷ்டிரா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா.விஜயகுமார், 8. பாலப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.பாண்டியன், 9. பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.செல்வேந்திரன் மெய்யப்பா, 10. சின்னாளபட்டி விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வெ.மலர்விழி ரவீந்திரன், 11. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் கி.அன்புமுத்து.

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ள இவர்களுக்கு, விருது வழங்கும் விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் 11 பேருக்கும் மாநில நல்லாசிரியர் விருதுக்கான பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்