மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணி

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கும்மிடிப்பூண்டியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் 45,431 வீடுகளில் 225 தன்னார்வலர்கள் மூலம் நேரிடையாக காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தொடர் கண்காணிப்பு பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

இத்தகைய தொடர் கண்காணிப்பு பணியை ரெட்டம்பேடு ஊராட்சியில் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் நேராக சென்று ஆய்வு செய்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்