காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தோட்டம் பாலாற்று பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதையொட்டி தூசி கிராமத்தை சேர்ந்த உதயசூரியன் (வயது 54), சுரேஷ் (28), பரசுராமன் (34), பிரகாஷ் (33), சங்கர் (55), வேலாயுதம் (31), கோபி (19), பன்னீர்செல்வம் (45), வரதராஜி (41), பாண்டியன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த ஆலத்தூர் கிராமம் கிளையாற்று ஓடையில் தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, குவளை கிராமம் பாப்பார தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (28), அதேகிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மணி (24), குளக்கரை தெருவை சேர்ந்த கார்த்திக் (30), ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (31) என்பது தெரியவந்தது.
போலீசார் அவர்களை கைது செய்து 4 மாட்டுவண்டிகளை கைப்பற்றினர்.