காஞ்சீபுரம்,
பள்ளிக்கல்வித்துறை சார்பாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிகள் நேற்று வெளியாகி உள்ளது. அதன்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வை 44 ஆயிரத்து 818 மாணவ-மாணவிகள் எழுதினர். அவர்களில் 42 ஆயிரத்து 859 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 95.63 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிக அளவில் தேர்ச்சி
மாணவிகள் 97.18 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.82 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மாணவர்களைவிட 3.36 சதவீதம் கூடுதலாகும்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.13 சதவீதம் பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.