திருவள்ளூர்,
இதற்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக என்ஜினீயர் செல்வமணி, திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ரவிராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர். நகர், அகரம், கசவநல்லாத்தூர், விடையூர், காரணி, இந்திராநகர் போன்ற பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 205 பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் உதவி நிர்வாக என்ஜினீயர் இளம்பரிதி, உதவி பொறியாளர் செந்தில்முருக ஜெயக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாசுதேவன், கே.என்.தாஸ், பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.