மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் பயிர் சேதம் கணக்கெடுக்கும் பணி குறித்த ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டியில் பயிர் சேதம் கணக்கெடுக்கும் பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு உளுந்து, பாசிப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழையால் சேதம் அடைந்தன. இதனால் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, பயிர் சேதம் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு அறிக்கை வழங்க வேண்டும் என்று கோவில்பட்டி உதவி கலெக்டருக்கு தெரிவித்து இருந்தார். அதன்படி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பயிர் சேதம் கணக்கெடுக்கும் பணி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் நடந்தது. உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார். தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் மோகன் (கோவில்பட்டி), வீரலட்சுமி (இளையரசனேந்தல்), தினகரன் (கழுகுமலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் விஜயா பேசுகையில், சேதம் அடைந்த உளுந்து, பாசி பயிறுகள் விவரம், எத்தனை ஏக்கர் பாதிக்கப்பட்டு உள்ளது. சேதம் மதிப்பு ஆகியவை குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும். 3 நாட்களின் அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும். தற்போது முதல் அந்த பணியை தொடங்க வேண்டும் என்று கூறினார். இதில் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு