மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனா பாதிப்பு

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 35 வயது ஆண். கொரோனா பாதிப்பு காரணமாக இவர் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 10-ந் தேதி இறந்தார் இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 130 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

20,235 பேர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 235 அதிகரித்து உள்ளது. இதில் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 355 ஆக உள்ளது.

தற்போது 3 ஆயிரத்து 728 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை