மாவட்ட செய்திகள்

மாதவரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மாதவரத்தில் திருமணம் ஆன 3 வருடத்தில் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரம் அலெக்ஸ்நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.

கொளத்தூரை சேர்ந்த சிராஜுதின். இவருடைய மகள் முஹின் (24) என்பவரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி பாண்டியன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும், 5 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் முஹினின் தாயார் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு அவருடைய பெற்றோர்கள் அவரை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த முஹின் நேற்று முன்தினம் இரவு கணவர், குழந்தைகள் தூங்கச்சென்றவுடன் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று காலை மனைவி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முஹினுக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் இந்த வழக்கை தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார். 2 வயது பெண் குழந்தையும், 5 மாத ஆண் கைக்குழந்தையும் தாயை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு