மாவட்ட செய்திகள்

மணப்பாறையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மணப்பாறையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சேதுரெத்தினபுரம் பகுதியில் அவ்வப்போது ஏதாவது ஒரு பணிக்காக பள்ளம் தோண்டப்படுவதால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் முறையாக வராமல் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

சமீபத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தால் பல்வேறு இடங்களிலும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் காவிரி குடிநீர் வராமல் கடும் அவதிக்கு ஆளான மக்கள் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இரண்டு முறை சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஆனாலும் காவிரி குடிநீர் முறையாக வராத நிலையில் கடும் அவதிக்கு ஆளான மக்கள் நேற்று காலை மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் சேதுரெத்தினபுரம் பிரிவு என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் குடிநீருக்காக பிச்சை எடுக்கும் போராட்டம் என்ற வாசகம் அடங்கிய அட்டையும், காலிக்குடங்களுடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். அதன் பின்னர் நகராட்சியின் மூலம் உடனடியாக குடிநீர் குழாய்களை சரிசெய்யும் பணி தொடங்கியது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை